கொழும்பில் வாழும் செல்வந்தர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!
கொழும்பில் வாழும் கோடீஸ்வரர்களுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களினால் பாரிய அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடீஸ்வரர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு 7 பகுதியில் திருட்டு சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதுடன் அதற்கான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு 7ல் உள்ள பல வீடுகளில் திருடர்கள் நுழைந்து கொள்ளையடித்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed